சார்பு நிலை பிற்படுத்தப்பட்ட தன்மை குறியீட்டு முன்னெடுப்பு
May 31 , 2025 175 days 145 0
தெலுங்கானா அரசாங்கத்தின் நிபுணர் பணிக் குழுவானது அதன் முதல் வகையான 'சார்பு நிலை/வரலாற்று ரீதியான பிற்படுத்தப்பட்ட தன்மை குறியீட்டை' உருவாக்க முடிவு செய்துள்ளது.
இந்தக் கணக்கெடுப்பில் பட்டியலிடப் பட்டுள்ள சுமார் 243 சாதி உட்பிரிவுகளுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வுகளை மதிப்பீடுவதற்கு என சாதி வாரிக் கணக்கெடுப்பு தரவுகளைப் பயன்படுத்துவதன் மூலம் இது மேற்கொள்ளப்படும்.
2024 ஆம் ஆண்டின் சமூக கல்வி வேலைவாய்ப்பு பொருளாதார அரசியல் சாதி (SEEEPC) வாரிக் கணக்கெடுப்பின் கீழ் சேகரிக்கப்பட்ட தரவை ஆய்வு செய்வதற்காகவும், பகுப்பாய்வு செய்வதற்காகவும், விளக்குவதற்காகவும் வேண்டி இந்தக் கணக்கெடுப்பு உருவாக்கப் பட்டது.
இந்நிபுணர் குழுவானது, கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பகுதிகளுக்கு இடையில் ஏழு பிரிவுகளின் கீழ் பிரிக்கப்பட்ட 43 அளவுருக்கள் வரை பயன்படுத்த உள்ளது.