சார்மட் கண்டம் விட்டு கண்டம் பாயும் உந்துவிசை ஏவுகணை
April 23 , 2022 1174 days 512 0
இது சமீபத்தில் ரஷ்யாவினால் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் உந்துவிசை ஏவுகணையாகும்.
இந்தப் புதிய ஏவுகணை தொகுதியானது, மிக உயரிய தந்திரோபய மற்றும் தொழில் நுட்ப அம்சங்களைக் கொண்டுள்ளது.
சார்மட் எனப்படும் இந்தப் பெயரானது சார்மாடியன் எனப் படும் ஒரு நாடோடிப் பழங்குடியினரின் நினைவாக சூட்டப்பட்டுள்ளது.
இந்தப் பழங்குடியினர் ரஷ்யா, உக்ரைன் மற்றும் கசகஸ்தான் ஆகிய நாடுகளின் தற்போதையப் பிராந்தியங்களில் கி.மு. 6 முதல் 4 ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்தனர்.