சாலைப் போக்குவரத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு தினம் - நவம்பர் 20
November 24 , 2022 953 days 374 0
இது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையன்று (இந்த ஆண்டு நவம்பர் 20 அன்று) அனுசரிக்கப்படுகிறது.
இந்த உலகளாவியத் தினமானது சாலைப் போக்குவரத்து விபத்துக்களால் பாதிக்கப் பட்டவர்கள், இறந்தவர்கள் அல்லது பலத்த காயம் அடைந்தவர்களை நினைவு கூர்வதற்கான ஒரு தினமாகும்.
2022 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "நீதி" என்பதாகும்.
உலக வாகன எண்ணிக்கையின் சுமார் 1 சதவீத வாகனங்களானது இந்தியாவில் பயன்படுத்தப் படுகிறது.
இருப்பினும், 2020 ஆம் ஆண்டில் பதிவான உலக சாலை விபத்துக்களில் 6 சதவீதம் ஆனது இந்தியாவில் தான் நிகழ்ந்துள்ளன.
சாலை அமைதி அமைப்பு ஆனது 1993 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்தினால் பாதிக்கப் பட்டோருக்கான உலக நினைவு தினத்தைத் தொடங்கியது.