TNPSC Thervupettagam

சாலை விபத்துகள் குறித்த ஒருங்கிணைந்த தரவுதளம் (Integrated Road Accident Database - IRAD)

January 19 , 2020 2036 days 703 0
  • இந்திய அரசாங்கமானது இந்த IRAD எனும் தரவுதளத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • முதன்முதலில் இந்த அமைப்பானது சாலை விபத்துகளினால் அதிக உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ள கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் சோதனை முறையில் இயக்கப்பட உள்ளது.
  • IRAD கைபேசிச் செயலியானது புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மூலமாக காவல்துறைப் பணியாளர்களுக்கு சாலை விபத்து பற்றிய விவரங்களைப் பதிவு செய்ய உதவும். அதைத் தொடர்ந்து அந்த விபத்து சம்பவம் தொடர்பான ஒரு தனிப்பட்ட அடையாள எண் உருவாக்கப் படும்.
  • சாலை விபத்துக்கானக் காரணங்களைப் பகுப்பாய்வு செய்வதிலும், நாட்டில் இது போன்ற விபத்துக்களைக் குறைப்பதற்காகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் இது உதவும்.
  • உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துக்களை இந்தியா எதிர்கொள்கின்றது.

இது பற்றி

  • இதை மதராஸ் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமானது உருவாக்கியுள்ளது.
  • இது தேசிய தகவல் மையத்தால் செயல்படுத்தப்பட உள்ளது.
  • இந்தத் திட்டத்திற்கான செலவிற்கு உலக வங்கி நிதி உதவியளிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்