சாஸ்த்ரா ராமானுஜன் பரிசு 2017 - மரியானா வயாஜோவ்ஸ்க
October 3 , 2017 2954 days 1158 0
சுவிட்சர்லாந்தின் லவ்சானேவில் உள்ள ஸ்விஸ் பெடரல் தொழில்நுட்ப நிறுவனத்தின் மரியானா வயாஜோவ்ஸ்கா, எண் கருத்தியலுக்கு தனது பங்களிப்பை அளித்தமைக்காக 2017-ம் ஆண்டிற்கான சாஸ்த்ரா ராமானுஜன் பரிசை பெறவுள்ளார்.
சாஸ்த்ரா ராமானுஜன் பரிசு
சாஸ்த்ரா ராமானுஜன் பரிசு 2005-ல் ஏற்படுத்தப்பட்டது. இது ஆண்டுதோறும், சீனிவாச இராமானுஜனால் பங்களிக்கப்பட்டு புகழடைந்த கணிதப் பிரிவுகளில் பங்களிப்புகள் அளிக்கும் இளம் கணிதவியலாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
இதற்கான வயது வரம்பு 32 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. ஏனெனில் இராமானுஜன் தனது 32 வயது வாழ்க்கைக்குள் நிறைய சாதனைகளை சாதித்தார்.
மரியானா வயாஜோவ்ஸ்கா
வயாஜோவ்ஸ்கா நிறைய அடிப்படையான எண் கருத்தியல் விஷயங்களுக்கு பங்களிப்புகள் அளித்த கணிதவியலாளர் ஆவார். இவர் உக்ரைனின் கிவ் நகரத்தில் 1984 நவம்பர் 2-ம் தேதி பிறந்தார்.