TNPSC Thervupettagam

சிகப்பு வழித்தடத்தில் உள்ள வனப் போர் பயிற்சிப் பள்ளி

September 22 , 2025 15 hrs 0 min 29 0
  • சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் மாவோயிஸ்ட் தளமான கர்ரேகுட்டா மலைகளில் அரசாங்கம் ஒரு வனப் போர் பயிற்சிப் பள்ளியை அமைத்து வருகிறது.
  • இந்தப் பள்ளி மத்திய சேமக் காவல் படை (CRPF), சத்தீஸ்கர் காவல்துறை மற்றும் உறுதி கொண்ட செயலுக்கான அதிரடிப்படை பிரிவு (COBRA) போன்ற படைகளுக்குச் சிறப்பு வன மற்றும் குகை சார் நடவடிக்கை உத்திகளில் பயிற்சி அளிக்கும்.
  • குகைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் உள்ளிட்ட கடினமான நிலப்பரப்பைக் கொண்ட கர்ரேகுட்டா மலைகள், ஒரு பெரிய CRPF நடவடிக்கைக்குப் பிறகு 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நக்சல் கட்டுப்பாட்டிலிருந்து அகற்றப்பட்டன.
  • இந்த உண்மையான நிலப்பரப்பு ஆனது பயிற்சித் தரத்தை மேம்படுத்த உதவும்.
  • தற்போது இது போன்றப் பணிகளுக்காக சுமார் 100 படைப்பிரிவுகள் நிலை நிறுத்தப் பட்டுள்ளதுடன் CRPF ஆனது எதிர்ப்புக் கிளர்ச்சி மற்றும் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்