TNPSC Thervupettagam
August 3 , 2022 1114 days 524 0
  • ஜம்மு காஷ்மீரில் கார்கில் பகுதியின் டிராஸ் என்னுமிடத்தில் உள்ள 5140 என்ற ஒரு சிகரத்திற்கு ‘துப்பாக்கி மலைக் குன்றுகள்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இந்திய ஆயுதப் படைகளின் வெற்றியை நினைவு கூறச் செய்வதையும், ‘விஜய் நடவடிக்கையில்’ துப்பாக்கி ஏந்திப் போராடி உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் உச்ச கட்டத் தியாகத்திற்குக் கௌரவம் செலுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இதற்கு இப்பெயரிடப்பட்டுள்ளது.
  • 1999 ஆண்டின் கார்கில் போரில் நடவடிக்கைகளை முன்கூட்டியே நிறைவு செய்வதற்கு 5140 சிகரம் கைப்பற்றப்பட்டது ஒரு முக்கியக் காரணியாக இருந்தது.
  • 5140 சிகரமானது, டோலோலிங் சரிவு மீது அமைந்த ஒரு மிக உயரியச் சிகரமாகும்.
  • திராஸ் உட்புறப் பகுதியில் இது மிகவும் கரடுமுரடான ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்