உச்ச நீதிமன்றத்தினால் அமைக்கப்பட்ட சிகூர் பீடபூமி யானை வழித்தட விசாரணைக் குழுவின் பெரும்பாலான கண்டுபிடிப்புகளை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
யானைகளுக்கு இடையூறு விளைவிக்காமல் அல்லது செயற்கைத் தடைகளைப் பயன்படுத்தாமல், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் நிலத்தைப் பேணி பயிரிடுவதற்கு தனியார் நில உரிமையாளர்களுக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.
தனியார் சொத்துக்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற குழுவின் பரிந்துரையை அது ரத்து செய்தது.
உத்தரவுப் பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் இந்த வழித் தடத்திற்கான நிலம் கையகப்படுத்துதலைத் தொடங்க வேண்டும் என்று இந்த அமர்வு உத்தரவிட்டது.
1991 ஆம் ஆண்டு தனியார் வன அறிவிப்புக்குப் பிறகு, விதிக்கப்பட்ட நில கொள்முதல் கட்டுப்பாடுகளின் செல்லுபடித் தன்மையினை எதிர்த்து உல்லாச விடுதி உரிமையாளர்கள் வழக்குத் தொடுத்தனர்.
1991 ஆம் ஆண்டு அறிவிப்பு மற்றும் 2010 ஆம் ஆண்டு வழித்தட அறிவிப்பு தொடர்பாக முதுமலை விருந்தோம்பல் சங்கம் தொடர்ந்து சட்டச் சவால்களை எதிர்கொண்டு உள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.