TNPSC Thervupettagam

சிக்கிம் பிரிவிற்கான நேரடித் தொடர்பு இணைப்பு

August 4 , 2021 1466 days 590 0
  • இந்திய மற்றும் சீன நாட்டு இராணுவங்கள் வடக்கு சிக்கிம் பிரிவில் ஒரு நேரடித் தொடர்பு இணைப்பினை நிறுவியுள்ளன.
  • இப்பகுதியிலுள்ள அசல் எல்லைக் கோட்டுப் பகுதிகளில் நம்பிக்கைத் தன்மையை அதிகரிக்கும் பொருட்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்த நேரடித் தொடர்பு இணைப்பானது, வடக்கு சிக்கிமின் கோங்ரா லா என்ற பகுதியிலுள்ள இந்திய இராணுவத்திற்கும் திபெத்திய தன்னாட்சிப் பகுதியின் கம்பா சாங் என்ற பகுதியிலுள்ள சீன மக்கள் விடுதலை இராணுவத்திற்கும் இடையே நிறுவப் பட்டுள்ளது.
  • இது 3,488 கி.மீ. நீளமான அசல் எல்லைக் கோட்டின் ஊடாக கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு இடையே வழங்கப்பட்டுள்ள 6வது நேரடித் தொடர்பு இணைப்பு ஆகும்.
  • தற்போது கிழக்கு லடாக், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகள் ஒவ்வொன்றிலும் இரண்டு நேரடித் தொடர்பு இணைப்புகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்