May 18 , 2021
1737 days
644
- சிக்கிம் ஆனது 1975 ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதியன்று இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது.
- அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் மே 16 ஆம் தேதியன்று சிக்கிம் மாநில நிறுவன தினமானது கொண்டாடப்படுகிறது.
- 1950 ஆம் ஆண்டில் இந்தோ சிக்கிமிய ஒப்பந்தமானது கையெழுத்தானது.
- இதன் மூலம் சிக்கிமானது இந்தியாவின் பாதுகாப்பு பெற்ற ஒரு மாநிலமாக மாறியது.
- 1975 ஆம் ஆண்டு வரை சிக்கிமை நம்க்யால் வம்சமானது ஆட்சி செய்தது.
- இந்தியப் பாராளுமன்றமானது 35வது திருத்தச் சட்டத்தில் சில நிபந்தனைகளை விதிக்கச் செய்து அதனை ஒரு “இணை மாநிலமாக” (Associate State) அறிவித்தது.
- இந்த நிலையைப் பெற்ற ஒரே மாநிலம் சிக்கிமாகும்.
- 36வது திருத்தச் சட்டமானது 35வது திருத்தச் சட்டத்தை ரத்து செய்து சிக்கிமை ஒரு முழு அளவிலான மாநிலமாக அறிவித்தது.
Post Views:
644