TNPSC Thervupettagam

'சிங்கம்' இனங்கள் குறித்த சிறப்புத் திட்டம்

May 19 , 2026 7 days 84 0
  • 2026-ஆம் ஆண்டிற்கான சர்வதேசப் பெரும் பூனைகள் கூட்டமைப்பு (IBCA) உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, குஜராத்தின் சசான் கிரி பகுதியில் 'சிங்கம்' இனங்கள் குறித்த சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டது.
  • இத்திட்டம் இந்தியாவின் ஆசிய சிங்கங்கள் பாதுகாப்பு முயற்சிகளை எடுத்து உரைத்ததுடன், சிங்கங்கள் வாழும் நாடுகளுக்கு இடையேயான சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவித்தது.
  • சுமார் 95 நாடுகளின் பங்கேற்புடன், 2026 ஆம் ஆண்டு ஜூன் 1–2 அன்று புதுடெல்லியில் முதலாவது IBCA உச்சிமாநாட்டை இந்தியா நடத்தவுள்ளது.
  • கிர் பகுதியில் உள்ள ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டில் 891 ஐ எட்டியுள்ளது, இது 2020 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது 32% வளர்ச்சியாகும்.
  • 2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சிங்கத் திட்டம், ஆசிய சிங்கங்களின் வாழ்விட விரிவாக்கம், அறிவியல் பூர்வ மக்கள் தொகை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்