May 24 , 2026
16 hrs 0 min
43
- தமிழ்நாட்டின் முதல் பெண் காவலர் எனப் பரவலாக அறியப்படும் சிசிலி சமீபத்தில் காலமானார்.
- அவர் 1973 ஆம் ஆண்டில் மெட்ராஸ் நகரில் மாநிலத்தின் முதல் அனைத்து மகளிர் காவல் பிரிவின் ஒரு பகுதியாகத் தமிழ்நாடு காவல்துறையில் சேர்ந்தார்.
- இந்த முன்னோடித் தொகுப்பில் முதல் பெண் உதவி-ஆய்வாளரான உஷாராணி நரேந்திரா உட்பட 22 பெண் காவலர்கள் இடம்பெற்றிருந்தனர்.
- முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் பதவிக் காலத்தில் தான் பெண் காவலர்களின் முதல் தொகுப்பு பணியமர்த்தப் பட்டது.
- திலகவதி மற்றும் லத்திகா சரண் ஆகியோர் பின்னாளில் இந்தியக் காவல் பணியில் (IPS) சேர்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் பெண்களாவர்.
- முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா இந்தியாவின் முதல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தைச் சென்னையின் ஆயிரம் விளக்கு பகுதியில் திறந்து வைத்தார்.

Post Views:
43