மியான்மரில் உள்ள சிட்வே துறைமுகத்தினை வந்தடைந்த முதல் இந்தியச் சரக்குக் கப்பலை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் வரவேற்றார்.
இது இந்தியாவின் கொல்கத்தாவின் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்திலிருந்து, மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் உள்ள சிட்வே துறைமுகம் வரையிலான சரக்குக் கப்பல்களின் வழக்கமானப் போக்குவரத்து வசதியினை இது துவக்கி வைத்துள்ளது.
சிட்வே துறைமுகமானது, கலாடான் பல்முனைச் சரக்குப் போக்குவரத்துத் திட்டத்தின் (KMTTP) ஒரு பகுதியாகும்.