சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான ஐக்கிய நாடுகளின் சர்வதேச தினம் - ஜூன் 26
June 28 , 2022 1194 days 381 0
உலகம் முழுவதிலும் சித்திரவதைகளை முற்றிலும் ஒழிப்பதை ஐக்கிய நாடுகள் சபை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முதலாவதாக, இரண்டாம் உலகப் போரின் மத்தியில் 1945 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதியன்று, ஐக்கிய நாடுகள் சாசனம் கையெழுத்தானது.
மனித உரிமைகளை மதிக்கவும் அவற்றை ஊக்குவிக்கவும் ஐக்கிய நாடுகள் சபை அமைப்பின் உறுப்பினர்களைக் கட்டாயப்படுத்தும் முதல் சர்வதேச விதிமுறை இது ஆகும்.
சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற, இழிவான நடத்தைக்கு எதிரான இரண்டாவது உடன்படிக்கையானது 1987 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்தது.
1997 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை இது தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியது.
1998 ஆம் ஆண்டானது உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தின் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.