இந்திய விமானப்படையானது, SCALP எறிகணைகள் மற்றும் AASM ஹேமர் குண்டுகள் போன்ற ஆயுதங்களை ஏந்திய ரஃபேல் ஜெட் விமானங்களை 2025 ஆம் ஆண்டு மே 07 அன்று அதிகாலை 23 நிமிடங்கள் நீடித்த சிந்தூர் நடவடிக்கையில் பயன்படுத்தியது.
25 நிமிடங்கள் நீடித்த இந்தத் தாக்குதல் ஆனது, அறியப்பட்ட தீவிரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்துத் தாக்கியது.
இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஒன்பது தீவிரவாத தளங்களைத் தாக்கி உள்ளன.
இந்த நான்கில் பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள பஹாவல்பூர் மற்றும் முரிட்கே மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முசாஃப்பராபாத் மற்றும் கோட்லி ஆகியவை அடங்கும் என்று கூறப் படுகிறது.
2019 ஆம் ஆண்டில் பாலகோட் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற உரி தாக்குதலுக்குப் பிறகு நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதல்களுக்குப் (surgical strikes) பிறகு நடத்தப்பட்ட மிகவும் விரிவான மற்றும் மிகவும் பரவலான எதிர் நடவடிக்கையினை இது குறித்தது.
இந்த அனைத்து அமைப்புகளுக்கும், லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்பு உள்ளது.
பஹல்காமில் தாக்குதலில், ஆண்கள் மட்டுமே அவர்களின் மத அடையாளங்களைக் கொண்டு தாக்கப்பட்டனர் என்ற கருதுகோளின் அடிப்படையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயர் குறிப்பிடுவதாகத் தெரிகிறது.
இலக்குகளைத் தாக்கிய பிறகு அமெரிக்கா, ஐக்கியப் பேரரசு, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இந்தியா விளக்கத் தகவல் அளித்து உள்ளது.
பாகிஸ்தானியப் பொதுமக்கள், பொருளாதார அல்லது இராணுவப் பகுதிகள் எதுவும் இதில் தாக்கப்படவில்லை.
இந்தியாவின் இந்த சிந்தூர் நடவடிக்கை குறித்த பத்திரிக்கை விளக்கக் கூட்டத்திற்கு நாட்டின் விமானப் படைத் தலைவர் வியோமிகா சிங் மற்றும் கர்னல் சோபியா குரேஷி ஆகியோர் தலைமை தாங்கினர்.
மகாராஷ்டிராவின் புனேவில் நடைபெற்ற பன்னாட்டு இராணுவப் பயிற்சியில் இந்திய இராணுவக் குழுவை வழி நடத்திய முதல் பெண் அதிகாரி சோபியா குரேஷி ஆவார்.