இந்திய விமானப் படையானது அதிக எடையை சுமந்து செல்லக்கூடிய நான்கு CH-47 சினூக் ரக வானூர்திகளை (ஹெலிகாப்டர்) தன்னுடன் இணைத்துள்ளது.
இந்த வானூர்திகள் சண்டிகரில் இந்திய விமானப் படைத் தலைமைத் தளபதியான BS தனோவாவால் இணைக்கப்பட்டது.
இந்த வானூர்திகள் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் உள்ள உயர்ந்த மலைப் பகுதிகளில் கண்காணிப்பை மேற்கொள்ளவும் மற்றும் படைகளை நிலை நிறுத்துவது உள்ளிட்ட பல்வேறு இராணுவப் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படவிருக்கிறது.
இராணுவ நடவடிக்கைகளுடன் பேரிடர் நிவாரணம், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், மருத்துவம், வெளியேற்றம், தீயணைப்பு மற்றும் பொது மக்கள் பயன்பாடு ஆகியவற்றிற்கும் இது பயன்படுத்தப்படவிருக்கிறது.
போயிங் CH-47 சினூக் என்பது அமெரிக்க நிறுவனமான வெர்டோல் மற்றும் போயிங் ரோட்டார்கிராப்ட் சிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்களால் இணைந்து இரு என்ஜின்களைக் கொண்ட வகையில் தயாரிக்கப்பட்ட அமெரிக்காவின் வானூர்தியாகும்.