தேசிய நெடுஞ்சாலைகள் & கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகமானது உலகின் மிகவும் நீளமான உயரம் கொண்ட சின்குன் லா சுரங்கப் பாதை என்று கருதப்படும் ஒரு திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றது.
சிங்கோ லா கணவாயின் கீழ் உள்ள 13.5 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தச் சுரங்கப் பாதையானது சிங்கோ லா மற்றும் படும் (Padum)ஆகியவை வழியாக மணாலி மற்றும் நிமுவிற்கு இடையே அனைத்து வானிலைகளிலும் பயன்படும் சாலை இணைப்பை வழங்குகின்றது.
இந்தச் சுரங்கப் பாதையானது இமாச்சலப் பிரதேசம் மற்றும் லேஹ் ஆகியவற்றிற்கு இடையே அனைத்து வானிலைகளிலும் பயன்படும் சாலை இணைப்பை வழங்க இருக்கின்றது.
இந்தச் சுரங்கப் பாதை கட்டமைப்பின் மூலம், ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜான்ஸ்கர் பள்ளத்தாக்கின் ஏறத்தாழ 15 கிராமங்கள் குளிர் காலத்தின் போது நிகழும் கடுமையான பனிப்பொழிவின் காரணமாக ஏற்படும் தனிமைப்படுத்துதலிலிருந்து விடுபட இருக்கின்றது.