ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காள மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் சிபிஐ-யானது அதன் நடவடிக்கைகளை நடத்த வழங்கியிருந்த பொது அனுமதியை திரும்பப் பெற்றுள்ளன.
NIA, 2008 (National Investigation Agency) என்ற தனது பிரத்தியேக சட்டத்தின் மூலம் நிர்வகிக்கப்பட்டு நாடு முழுவதும் தனது அதிகார வரம்பைக் கொண்டுள்ள தேசிய புலனாய்வு அமைப்பு போலல்லாது,
சிபிஐ-யானது டெல்லி சிறப்பு காவல்துறை நிறுவுதல் சட்டம், 1946 மூலமாக நிர்வகிக்கப்படுகிறது.
இது சம்பந்தப்பட்ட மாநிலங்களில் விசாரணையை நடத்த அந்தந்த மாநில அரசின் ஒப்புதலைப் பெறுவதை கட்டாயமாக்குகிறது.