May 19 , 2021
1504 days
868
- ஈரான் நாடானது சிமோர்க் என அழைக்கப்படும் தனது அதிவேகக் கணினியை வெளியிட்டுள்ளது.
- இது ஈரானின் முந்தைய அதிவேகக் கணினிகளை விட 100 மடங்கு சக்தி வாய்ந்தது ஆகும்.
- இந்த அதிவேகக் கணினிக்கு பீனிக்ஸ் பறவையைப் போன்று இருக்கும் சிமோர்க் எனும் பறவையின் பெயரானது சூட்டப்பட்டுள்ளது.
- சிமோர்க் அதிவேகக் கணினியானது ஈரானின் தலைநகரான டெஹ்ரானிலுள்ள அமீர் கபிர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தினால் உருவாக்கப்பட்டது.
- இது ஈரானிய உயர் செயல்திறன் கணினி ஆராய்ச்சி மையத்தில் அமைந்துள்ளது.
Post Views:
868