சியாச்சின் பகுதியில் இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின் முதல் ஆய்வு
July 19 , 2023 768 days 381 0
2023 ஆம் ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டமானது, சியாச்சின் பனிப்பாறையின் ஆய்வின் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வின் ஒரு ரத்தின விழாவினைக் குறிக்கிறது.
1958 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், சரியாக 65 ஆண்டுகளுக்கு முன்பு, சியாச்சின் பனிப் பாறையில் இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட முதல் ஆய்வுக்கு இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின் உதவிப் புவியியலாளர் V. K. ரெய்னா தலைமை தாங்கினார்.
இது அடுத்தடுத்து வந்த காலங்களில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு சர்ச்சைக்குரிய இடமாக மாறியதோடு, 1984 ஆம் ஆண்டில் இப்பகுதியில் இந்திய ஆயுதப் படைகளால் மேக்தூத் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
5Q 131 05 084 என்பது சியாச்சின் பனிப்பாறைக்கு இந்தியப் புவியியல் ஆய்வு மையம் (GSI) வழங்கிய எண் ஆகும்.
1949 ஆம் ஆண்டு கராச்சி போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பரஸ்பரமாகப் பிரிக்கப்பட்ட பகுதி NJ 9842 ஆகும்.
மேலும், சிம்லா ஒப்பந்தத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி முடிவடையும் இடம் இதுவாகும்.
1958 ஆம் ஆண்டு சர்வதேசப் புவி இயற்பியல் ஆண்டாகக் கொண்டாடப் பட்டதால், உலகம் முழுவதும் உள்ள புவியியலாளர்களுக்கு இது ஒரு முக்கியமான ஆண்டாகக் கருதப் படுகின்றது.