தெற்கு சிரியாவில் ட்ரூஸ் ஆயுதக் குழுக்களுக்கும் சன்னி பெடோயின் என்ற வகை இன உறுப்பினர்களுக்கும் இடையே ஒரே இரவில் மீண்டும் மோதல்கள் வெடித்தன.
சிரியாவின் அரசாங்கப் படைகள் ஆனது, ட்ரூஸ் பெரும்பான்மை மிக்க சுவீடா தெற்கு மாகாணத்திலிருந்து வெளியேறின.
ட்ரூஸ் மதச் சிறுபான்மையினருடன் தொடர்புடையப் போராளிகளுடன் பல நாட்கள் நடந்த மோதல்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது.
ட்ரூஸ் இனத்தவர்கள் இஸ்ரேலிலும், சிரியாவிலும் மிக கணிசமான எண்ணிக்கையில் காணப் படுகின்றனர் என்பதோடு அவர்கள் இஸ்ரேல் நாட்டில் மிகவும் விசுவாசமான சிறுபான்மையினராகவும் பெரும்பாலும் இராணுவத்தில் பணியாற்றுபவர்களாகவும் உள்ளனர்.
ட்ரூஸ் மதப் பிரிவு ஆனது சுமார் 10 ஆம் நூற்றாண்டில் ஷியா இஸ்லாமியத்தின் ஒரு கிளையான இஸ்மாயிலிசத்தின் ஒரு பிரிவாகத் தொடங்கியது.
மற்ற ட்ரூஸ் இனத்தவர்களில் பெரும்பாலோர் சிரியாவில் உள்ள கோலான் ஹைட்ஸ் பகுதி உட்பட லெபனான் மற்றும் இஸ்ரேலில் வசிக்கின்றனர்.
1967 ஆம் ஆண்டில் நடைபெற்ற மத்தியக் கிழக்குப் போரில் இஸ்ரேல் சிரியாவிலிருந்து கோலன் ஹைட்ஸ் பகுதியைக் கைப்பற்றி 1981 ஆம் ஆண்டில் அதனுடன் இணைத்தது.