TNPSC Thervupettagam

சிறந்த நிர்வாகக் குறியீடு 2019

December 27 , 2019 2004 days 918 0
  • 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று அனுசரிக்கப்பட்ட “சிறந்த ஆளுகை தினத்தின்” போது ‘சிறந்த நிர்வாகக் குறியீட்டின்’ சமீபத்திய பதிப்பானது வெளியிடப் பட்டுள்ளது.
  • இந்தியாவின் முன்னாள் பிரதமரான அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த தினத்தில் (டிசம்பர் 25) சிறந்த ஆளுகை தினமானது அனுசரிக்கப்படுகின்றது.
  • இத்தினமானது 2014 ஆம் ஆண்டில் முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.

GGI

  • சிறந்த ஆளுகைக் குறியீடு (Good Governance Index - GGI) என்பது ஆளுகையின் நிலை மற்றும் மாநில அரசு & ஒன்றியப் பிரதேசங்கள் ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டங்களின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கான ஒரு கருவியாகும்.
  • GGI ஆனது மத்தியப் பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறை தீர்ப்புத் துறையினால் வெளியிடப்பட்டது.
  • இந்தக் குறியீட்டில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தக் குறியீட்டில் தமிழ்நாட்டிற்கு அடுத்து மகாராஷ்டிரா, கர்நாடகா, சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
  • GGI ஆனது 10 பிரிவுகளின் கீழ் மாநிலங்களைத் தரவரிசைப் படுத்தியுள்ளது.
  • இந்த பத்து நிர்வாகப் பிரிவுகள் மொத்தம் 50 குறிகாட்டிகளைக் கொண்டு அளவிடப் படுகின்றன.
  • மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன: அ) பெரிய மாநிலங்கள் ஆ) வடகிழக்கு மற்றும் மலைப் பிரதேச மாநிலங்கள் மற்றும் இ) ஒன்றியப் பிரதேசங்கள்.

துறை வாரியான தரவரிசை:

  • சுற்றுச்சூழல்:
    • சுற்றுச்சூழல் பிரிவில் மேற்கு வங்கம், கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
    • வடகிழக்கு மற்றும் மலைப் பிரதேச மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் முதலிடத்தில் உள்ளது.
  • நீதித்துறை மற்றும் பொதுப் பாதுகாப்புத் தரவரிசை:
    • நீதித்துறை மற்றும் பொதுப் பாதுகாப்புத் தரவரிசையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இப்பிரிவின்  கடைசி இடத்தில் மேற்கு வங்கம் உள்ளது.
  • பொருளாதார நிர்வாகம்:
    • பொருளாதார நிர்வாகப் பிரிவில் கர்நாடக மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
  • சுகாதாரம்:
    • பொதுச் சுகாதாரத் துறையில் கேரளா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் கோவா ஆகியன உள்ளன.
  • பொது உள்கட்டமைப்பு வசதிகள்:
    • தமிழகம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முறையே பெரிய மாநிலங்கள் மற்றும் மலைப் பிரதேச மாநிலங்கள் ஆகிய குழுக்களில் முதலிடங்களில் உள்ளன.
  • சமூக நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை:
    • பெரிய மாநிலங்களில் சத்தீஸ்கர் முதலிடத்தில் உள்ளது.

தமிழ்நாடு – ஒரு பார்வை

  • சுற்றுச்சூழல் (3)
  • மனித வள மேம்பாடு (5)
  • பொருளாதார நிர்வாகம் (5)
  • சமூக நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை (7)
  • விவசாயம் மற்றும் அது தொடர்பான துறைகள் (9)
  • வர்த்தகம் மற்றும் தொழில்துறை (14)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்