TNPSC Thervupettagam

சிறப்புப் பகுதி மேம்பாட்டு ஆணையம்

January 26 , 2026 14 hrs 0 min 22 0
  • சிறப்புப் பகுதி மேம்பாட்டு ஆணையத்தை உருவாக்குவதற்கான மசோதாவை தமிழ்நாடு அரசு மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது.
  • வரலாறு, சுற்றுச்சூழல், தொல்பொருள் அல்லது சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளின் திட்டமிட்ட மேம்பாட்டினை உறுதி செய்வதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சிறப்புப் பகுதி மேம்பாட்டு ஆணையத்தை அமைப்பதற்காக மாமல்லபுரம் மற்றும் கன்னியாகுமரி போன்ற பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • முன்மொழியப்பட்ட இந்த ஆணையம் ஆனது நிலையான உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான சிறப்புப் பகுதி பெருந்திட்டத்தைத் தயாரிக்கும்.
  • தமிழ்நாடு நகர மற்றும் கிராமத் திட்டமிடல் சட்டம், 1971 போன்ற தற்போதைய சட்டங்கள் இத்தகைய சிறப்புப் பகுதிகளுக்கு போதுமானவை அல்ல என்று மசோதா கூறுகிறது.
  • புதிய கட்டமைப்பு உள்ளூர் அமைப்புகள் அல்லது பாரம்பரிய ஆணையத்தின் அதிகாரங்களைப் பாதிக்காமல் செயல்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்