தமிழக மாநில அரசானது, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிப்பதற்கான சிறப்பு அதிகாரிகளின் (SOs) பதவிக் காலத்தினை 2026 ஆம் ஆண்டு ஜனவரி 05 ஆம் தேதி வரை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
இந்த நீட்டிப்பு ஆனது 28 மாவட்டங்களில் உள்ள 9,581 கிராமப் பஞ்சாயத்துகள், 314 பஞ்சாயத்து ஒன்றிய சபைகள் மற்றும் 28 மாவட்டப் பஞ்சாயத்துகளில் பொருந்தும்.
இந்த நீட்டிப்பை நடைமுறைப்படுத்த ஓர் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஒரு மசோதாவாக அது மாற்றப்படும்.
2024 ஆம் ஆண்டு ஜனவரி 05 ஆம் தேதியன்று தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து SO அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
இங்கு உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பதில் ஏற்பட்டத் தாமதங்கள் மற்றும் நிலுவையில் உள்ள மன்ற அமைப்புகளின் தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றினை நீட்டிப்புக்கான காரணங்களாக அரசாங்கம் குறிப்பிட்டது.