சிறப்பு எஃகு உற்பத்தித் திட்டத்தின் மூன்றாவது சுற்று (PLI 1.2)
November 23 , 2025 5 days 19 0
எஃகு அமைச்சகம் ஆனது புது டெல்லியில் சிறப்பு எஃகு உற்பத்தி ஊக்குவிப்பு (PLI) திட்டத்தின் மூன்றாவது சுற்றினைத் (PLI 1.2) தொடங்கியது.
இந்தத் திட்டம் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், 6,322 கோடி ரூபாய் என்ற மொத்த ஒதுக்கீட்டில் அங்கீகரிக்கப்பட்டது.
உயர் மதிப்பு மற்றும் மேம்பட்ட எஃகு உற்பத்திக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றுவதே இதன் நோக்கமாகும்.
இந்தத் திட்ட,மானது, 22 சிறப்பு எஃகுத் தயாரிப்புகளில் அதிகரிக்கும் உற்பத்தி மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கிறது.
இதில் உள்ளடக்கப்பட்ட சில தயாரிப்புகள் ஆனது, சிறப்பு உலோகக் கலவைகள், துருப் பிடிக்காத எஃகு, டைட்டானியம் உலோகக் கலவை, கலப்பு உலோக வார்ப்புகள், CRGO மற்றும் பூச்சு பூசப்பட்ட எஃகு ஆகும்.
2026–27 ஆம் நிதியாண்டு முதல் பணம் செலுத்தப்படுவதுடன், 2025–26 ஆம் நிதியாண்டு தொடங்கி ஐந்து ஆண்டுகளுக்கு 4% முதல் 15% வரையிலான விகிதங்களில் ஊக்கத் தொகை வழங்கப்படும்.