TNPSC Thervupettagam

சிறப்பு காவல் படைப்பிரிவில் மகளிர் இடஒதுக்கீடு

August 27 , 2025 10 days 56 0
  • தமிழ்நாடு அரசானது, சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு சிறப்பு காவல் படைப்பிரிவில்  மகளிருக்கான நுழைவு மற்றும் இடஒதுக்கீட்டை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஆகஸ்ட் மாதம் உள்துறை அமைச்சகத்தால் வெளியிட்ட அரசு ஆணையில், ஆயுதப் படை காவல் படைப் பிரிவில் மீண்டும் சேர்க்கப்படுவதற்கு மகளிர் முழுவதும் தகுதி உடையவர்கள் என்பதை உறுதிப்படுத்தியது.
  • 17 ஆண்டுகளுக்குப் பிறகு காவலர் ஆட்சேர்ப்பிற்கான ஒற்றை நுழைவு முறையையும் அரசாங்கம் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த அமைப்பானது, ஆட்சேர்ப்பு முறையில் சீரான தன்மையை உறுதி செய்வதோடு, பதவி அமர்வுகள் மற்றும் பதவி உயர்வுகளில் வயது மூப்பு தொடர்பான சிக்கல்களைத் தடுக்க உதவுகிறது.
  • மகளிர் காவலர்களுக்கு ஆயுதப்படை காவல் படைப்பிரிவில் பயிற்சி வழங்கப்பட்டு, பின்னர் மாவட்ட ஆயுதப்படை சேமக் காவல் பிரிவு மற்றும் பின்னர் தாலுக்கா காவல் நிலையங்களுக்கு மாற்றப்படுவார்கள்.
  • முன்னதாக, பதினைந்து படைப்பிரிவுகளில் ஒன்றான வைஷ்ணவி நகரில் உள்ள ஐந்தாவது படைப் பிரிவு மட்டுமே பிரத்தியேக மகளிர் பிரிவாக இருந்தது.
  • 2011 ஆம் ஆண்டில், தமிழ்நாடு சிறப்பு காவல்துறையில் பெண்களைச் சேர்ப்பது நிறுத்தப் பட்டு, தாலுக்கா மற்றும் ஆயுதப்படை சேமக் காவல் பணிகளுக்கு மட்டுமே பெண்கள் நியமிக்கப்பட்டனர்.
  • 2008 ஆம் ஆண்டில், அரசாங்கம் ஒற்றை-நுழைவு முறையை ரத்து செய்தது, இது பதவி உயர்வுகள் மற்றும் பணியமர்த்தலில் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுத்தது.
  • தமிழ்நாடு சிறப்பு காவல்துறையின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மாநிலத்திற்கு உள்ளேயும், வெளியேயும் முக்கியச் சட்டம் ஒழுங்கு பணிகளுக்காக பணியமர்த்தப்படுகிறார்கள்.
  • எட்டாவது படைப்பிரிவு ஆனது திகார் சிறையில் கடமைகளுக்காக டெல்லியில் பணி அமர்த்தப் பட்டுள்ளதோடு பதின்மூன்றாவது படைப்பிரிவானது தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையாக செயல்படுகிறது.
  • 2025 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி நிலவரப்படி, தமிழ்நாடு காவல்துறையில் 26,589 மகளிர் பணியாளர்கள் உட்பட 1,33,961 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்