இந்திய இரயில்வேயானது தனது முதலாவது சிறப்பு சரக்கு இரயிலை வங்க தேச நாட்டிற்கு இயக்கியுள்ளது.
இது காய்ந்த மிளகாய்களை ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்திலிருந்து வங்க தேசத்திற்கு எடுத்துச் சென்றது.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள குண்டூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் மிளகாய்களின் சாகுபடிக்கு வேண்டி மிகவும் சிறப்பாக அறியப்படுகின்றன.
இந்தியாவில் மிளகாய் உற்பத்தியில் முதன்மையான மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் விளங்குகின்றது. இது மொத்த மிளகாய் உற்பத்தியில் 26%ற்கும் மேலான பங்கை வகிக்கின்றது.
குண்டூர் சன்னம் மிளகாய் என்பது புவிசார் குறியீடு பெற்றுள்ள மிளகாயின் ஒரு வகையாகும்.