மேற்கொண்டு மேலும் அதிக எண்ணிக்கையிலான பிரத்தியேகமான சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்குவது குறித்து விவாதிக்க மாநிலங்கள் மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் உயர் மட்டக் கூட்டத்தை நடத்த உள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
வழக்கமான நீதிமன்றங்களில் அதிக வழக்குகள் நிலுவையில் இருப்பதால், வழக்காடல் தாமதமாகுவதால், NIA சட்டம் மற்றும் UAPA போன்ற சிறப்புச் சட்டங்களின் கீழ் விரைவான விசாரணைகளை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
சிறப்புச் சட்டங்களின் கீழ் விசாரணை நடவடிக்கைகளை காலவரையின்றி தாமதப் படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
நியமிக்கப்பட்ட 52 நீதிமன்றங்களில் 3 நீதிமன்றங்கள் மட்டுமே தற்போது NIA வழக்குகளுக்காக மட்டுமே பிரத்தியேகமாகச் செயல்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
NIA வழக்குகளில் விசாரணைகள் உடனடியாக நடத்தப்படாவிட்டால், விசாரணைக் கைதிகள் பிணையில்/ஜாமீனில் விடுவிக்கப்பட வேண்டியிருக்கும் என்று நீதிமன்றம் எச்சரித்தது.
பிரத்தியேக நீதிமன்றங்கள் மற்றும் உள்கட்டமைப்பு இல்லாமல், விசாரணை இல்லாமல் காலவரையற்ற காவலானது ஏற்றுக் கொள்ளத் தக்கது அல்ல என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது.