தென்கிழக்கு கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (SECL) நிறுவனமானது, நிலத்தடி நிலக்கரிச் சுரங்கத்திற்காக என்று சிறப்பு பசைக் கலவை நிரப்புத் தொழில்நுட்பத்தைச் செயல்படுத்தும் முதல் நிலக்கரிப் பொதுத்துறை நிறுவனமாக மாறுகிறது.
இது சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் அதே வேளையில் அதன் மேற்பரப்பு சார்ந்த கட்டுப்பாடுகள் உள்ள பகுதிகளில் நிலக்கரி எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகிறது எனும் செயல்முறையினை இது மாற்றியமைக்கும்.
சத்தீஸ்கரின் கோர்பா பகுதியில் உள்ள சிங்காலி நிலத்தடி நிலக்கரிச் சுரங்கத்தில் சிறப்புப் பசைக் கலவை நிரப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு பெரிய அளவிலான நிலக்கரி உற்பத்திக்கான கட்டமைப்பை இது நிறுவுகிறது.
இந்த முக்கியச் செயல்முறையானது, நிலத்தடி அடுக்குகளில் இருந்து நிலக்கரியைப் பிரித்தெடுத்து, அதன் விளைவாக உருவாகும் வெற்றிடங்களைப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பசையால் நிரப்புவதை உள்ளடக்கியது.
இந்த பசையில் எரி சாம்பல், திறந்தவெளிச் சுரங்கங்களிலிருந்து பெறப்பட்ட நொறுக்கப் பட்ட மிக அதிகப்படியான கரிகள், சிமெண்ட், நீர் மற்றும் பிணைப்பு இரசாயனங்கள் ஆகியவற்றின் கலவை உள்ளது.