இந்தியாவில் 2024-ஆம் ஆண்டில் சிறார் குற்ற வழக்குகள் அதிகரித்துள்ளதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) தெரிவித்துள்ளது.
2023-ஆம் ஆண்டில் 31,365 ஆக இருந்த சிறார் குற்ற வழக்குகள், 2024-ஆம் ஆண்டில் 34,878 ஆகப் பதிவாகியுள்ளன.
சிறார் குற்ற விகிதம் 2023-ஆம் ஆண்டில் 7.1-லிருந்து 2024-ஆம் ஆண்டில் 7.9 ஆக அதிகரித்துள்ளது.
இந்தக் குற்ற வழக்குகள் தொடர்பாக இந்தியா முழுவதும் மொத்தம் 42,633 சிறார்கள் பிடிபட்டனர்.
சட்டத்துடன் முரண்படும் குழந்தைகள் மற்றும் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளை சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015 முறைப்படுத்துகிறது.
பெருநகரங்களில் தில்லி அதிகபட்சமாக 2,306 சிறார் குற்ற வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.