சிறார் நீதி (குழந்தை நலன் மற்றும் பாதுகாப்பு) திருத்த மசோதா
August 1 , 2021 1464 days 1742 0
இந்த மசோதாவானது சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.
குழந்தை தத்தெடுப்பு மற்றும் குழந்தை நலன் குறித்த விசயங்களில் கூடுதல் மாவட்ட நீதிபதிகள் மற்றும் மாவட்ட நீதிபதிகளின் பங்கினை இந்த மசோதா அதிகரிக்க முனைகிறது.
இந்த மசோதாவானது 2015 ஆம் ஆண்டு சிறார் நீதிச் சட்டத்தினைத் திருத்த உள்ளது.
ஒரு குடிமையியல் நீதிமன்றத்தினால் ஆணை வழங்கப்பட்ட பின்னரே குழந்தை தத்தெடுப்பு உறுதிபடுத்தப் படும் என இச்சட்டம் கூறுகிறது.
நீதிமன்றத்திற்குப் பதிலாக கூடுதல் மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட நீதிபதி அந்த தத்தெடுப்பு ஆணையை வழங்குவார் என்று இந்தப் புதிய மசோதா மாற்றியமைக்க உள்ளது.