வேலூர், மேலரசன்பட்டு கிராமத்தில் கோயில்மலையாற்றின் குறுக்கே ஒரு சிறிய அணைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
கோயில்மலையாறு ஆறு பாலாற்றின் துணை நதியாகும் என்பதோடு மேலும் இந்த அணை ஜவ்வாது மலைகளின் அடிவாரத்தில் உள்ள அமிர்தி விலங்கியல் பூங்காவிற்கு அருகிலுள்ள மேலரசன்பட்டு மற்றும் கருத்தமலை காப்புக் காடுகளுக்கு இடையே கட்டப் படும்.
இது 2001 ஆம் ஆண்டு குடியாத்தத்தில் உள்ள கவுண்டின்யா என்ற ஆற்றின் குறுக்கே மோர்தானா அணை திறக்கப்பட்ட பிறகு நீர்வளத் துறை (WRD) மேற்கொண்ட முதல் திட்டமாகும்.
விதிமுறைகளின்படி, சிறிய அணைகள் ஐந்து மீட்டருக்கும் குறைவான உயரத்திலும், இடைநிலை அணைகள் ஐந்து முதல் 15 மீட்டர் வரையிலும், பெரிய அணைகள் 15 மீட்டருக்கு மேல் உயரத்திலும் கட்டப்படுகின்றன;இந்த உயரம் சேமிப்புத் திறனையும் தீர்மானிக்கிறது.
திருவண்ணாமலையின் ஜவ்வாது மலைகளின் மேல் உள்ள வீரப்பனூர் காப்புக் காட்டில் உள்ள பீமன் நீர்வீழ்ச்சி, கோயில்மலையாறு நதிக்கு ஒரு முக்கிய நீர் ஆதாரம் ஆகும்.
இந்த ஆறு காடுகள் மற்றும் சமவெளிகள் வழியாகப் பாய்ந்து, புதிய அணை கட்டப் பட்ட இடத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் பாலாற்றில் இணைகிறது.