சிறிய வன உற்பத்தி பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை
January 2 , 2019 2325 days 750 0
மத்திய அரசானது அரசின் குறைந்தபட்ச ஆதார விலை (MSP – Minimum Support Price) திட்டத்தின் கீழ் 7 சிறு வன உற்பத்திப் பொருள்களை (Minor forest produce-MFP) உள்ளடக்குவதாக அறிவித்துள்ளது.
உலர்த்தப்பட்ட மஹீவா மலர்கள், உலர்த்தப்பட்ட தேஜாபட்டா மற்றும் உலர்த்தப்பட்ட கொக்கும் ஆகியவை இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட புதிய பொருள்களாகும்.
மேலும் அரசு 2013ல் ஆண்டிலிருந்து சேர்க்கப்பட்ட பொருள்களில் 23 சிறு வன உற்பத்தி பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்திக் கொண்டு இருக்கின்றது.
MFP-க்கான MSP
வனப்பகுதிகளில் வசிக்கும் சமுதாயத்தினரின் பல ஆண்டு கோரிக்கைகளுக்குப் பின்னர் 2013 - 14 ஆம் ஆண்டில் முதன்முறையாக சிறு வன உற்பத்தி பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அரசு அறிவித்தது.
இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவு சந்தை மேம்பாட்டு கூட்டமைப்பு லிமிடெட்டால் (Tribal Cooperative Marketing Development Federation of India Ltd -TRIFED) அமைக்கப்பட்ட விலைப் பிரிவு அமைப்பு, இந்த திட்டத்தின் கீழ் புதிய MFP-களைச் சேர்த்துக் கொள்ள பரிந்துரை செய்கிறது.
80% வரையிலான பழங்குடியினர் சமுதாயத்தின் பண வருமானத்தை MSP அளிக்கிறது.