சிறுதானியங்களை ஊக்குவிப்பது தொடர்பான நிதி ஆயோக் அறிக்கை
May 3 , 2023 829 days 365 0
நிதி ஆயோக் அமைப்பானது, ‘உணவில் சிறுதானியங்களின் பெரும் பயன்பாட்டினை ஊக்குவித்தல்: இந்தியாவின் மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களின் சிறந்த நடைமுறைகள்’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
சிறுதானிய பெருமதிப்புச் சங்கிலியின் பல்வேறு அம்சங்களில் குறிப்பாக உற்பத்தி, பதப்படுத்துதல் மற்றும் நுகர்வு ஆகியவற்றில் மாநில அரசுகள் மற்றும் பல்வேறு உற்பத்தி அமைப்புகளால் பின்பற்றப்பட்ட நல்ல முறையிலான மற்றும் புதுமையான நடைமுறைகளின் தொகுப்பினை இந்த அறிக்கை முன்வைக்கிறது.
இந்த அறிக்கையானது மூன்று கருத்துருக்களைக் கொண்டுள்ளது
சிறுதானியங்களின் பயன்பாட்டினை ஊக்குவிப்பதற்கான மாநில அரசின் பல திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகள்;
ஒருங்கிணைந்த சிறார் மேம்பாட்டுத் திட்டத்தில் சிறுதானியங்களைச் சேர்த்தல்;
ஆராய்ச்சி & மேம்பாடு மற்றும் புத்தாக்கம் மிக்க நடைமுறைகளுக்காக தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துதல்.
இந்த அறிக்கை நமது உணவில் சிறுதானியங்களின் பயன்பாட்டினைப் புத்துயிர் பெறச் செய்வதற்கும் அதனை நன்கு நெறிமுறைப்படுத்தச் செய்வதற்குமாக வேண்டி ஒரு வழி காட்டும் களஞ்சியமாக இருக்கும்.