சிறுத்தை பிறப்புக் கட்டுப்பாடுத் திட்டம் - மகாராஷ்டிரா
November 21 , 2025 16 hrs 0 min 12 0
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகம் (MoEFCC) ஆனது மகாராஷ்டிராவில் சிறுத்தை பிறப்புக் கட்டுப்பாடு (கருத்தடை) திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
இது இந்தியாவின் முதல் சிறுத்தை பிறப்புக் கட்டுப்பாட்டுத் திட்டமாக இருக்கும்.
ஜுன்னார் வனப் பிரிவில் (புனே மாவட்டம்) ஐந்து பெண் சிறுத்தைகள் மீது நோயெதிர்ப்புடன் கூடிய கருத்தடை முறையைப் பயன்படுத்தி இந்தச் சோதனை மேற் கொள்ளப் படும்.
கருத்தடை அறுவை சிகிச்சையானது கருவுறுதலைத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்த dart முறையில் உடலில் மேற்கொள்ளப்படும் என்பதோடுநோயெதிர்ப்புத் திறனுடன் கூடிய கருத்தடை முறையைப் பயன்படுத்தும்.
இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) இந்தத் திட்டத்தை மதிப்பாய்வு செய்து கட்டுப்படுத்தப் பட்ட, அறிவியல் பூர்வமாக கண்காணிக்கப்பட்ட சோதனையை ஆதரித்தது.
இந்தத் திட்டம் ஜுன்னார் மற்றும் ஷிரூர் போன்ற கரும்பு விளைப் பகுதிகளில் மனித-சிறுத்தை மோதலைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.