சிறுவாணி மலைகளில் உள்ள குடிமக்கள் அறிவியலாளர்கள் உதவியுடன் ரைனோஃபிஸ் சிறுவானியென்சிஸ் என்ற புதிய கேடய வால் பாம்புகள் இனம் கண்டறியப் பட்டுள்ளது.
கேடய வால் பாம்புகள் யூரோபெல்டிடே குடும்பத்தைச் சேர்ந்த சிறிய, விஷமற்ற, மண்ணில் துளையிடும் பாம்புகள் ஆகும் என்பதோடுஇவை யூரோபெல்டிட்ஸ் என்றும் அழைக்கப் படுகின்றன.
அவற்றின் வட்டு வடிவ வால் முனை காரணமாக அவை "கேடய வால் பாம்புகள்" என்று பெயரிடப்பட்டுள்ளன.
இந்தப் பாம்புகள் முக்கியமாக மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் தீபகற்ப இந்தியாவின் சில பகுதிகளில் காணப்படுவதுடன், இந்தியா மற்றும் இலங்கையில் மட்டுமே காணப்படுகின்றன.