சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தினம் – ஜுன் 27
June 29 , 2021 1499 days 579 0
உள்நாட்டு மற்றும் உலகளாவியப் பொருளாதாரத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பணிகளையும் நீடித்த மற்றும் நிலையான மேம்பாட்டில் அவை ஆற்றும் பங்களிப்பினையும் கொண்டாடும் வகையில் இந்த தினமானது ஐக்கிய நாடுகளினால் கடைப்பிடிக்கப் படுகிறது.
மேலும் இந்த தினமானது நீடித்த மற்றும் நிலையான மேம்பாட்டு இலக்குகளை அமல்படுத்தச் செய்வதற்கான இந்த நிறுவனங்களின் சிறந்தப் பங்களிப்பினையும் அங்கீகரிக்கிறது.
இந்த ஆண்டின் இந்த தினத்திற்கான கருத்துரு, “MSME 2021 : Key to an inclusive and sustainable recovery” என்பதாகும்.