தமிழ்நாட்டின் சிறு நிதி துறையில் மொத்த நிலுவைக் கடன் (GLP - gross loan portfolio) 2025 ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் 23.5% குறைந்து 43,700 கோடி ரூபாயாக இருந்தது.
கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில் இது 57,100 கோடி ரூபாயாக இருந்தது.
காலாண்டு அடிப்படையில் (QoQ), 2025 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி நிலவரப்படி GLP 46,800 கோடி ரூபாய் மதிப்பிலிருந்து 6.7% குறைந்துள்ளது.
2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு பணக் கடன் வழங்கும் நிறுவனங்கள் (கட்டாய நடவடிக்கைகளைத் தடுக்கும்) சட்டம் ஆனது ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டது.
கடன் வாங்குபவர்களுக்கு எதிரான கட்டாய நடவடிக்கை தொடர்பான இச்சட்டத்தின் விதிகள் இந்திய ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களுக்கும் பொருந்தும்.
முத்தூட் மைக்ரோஃபின் நிறுவனமானது, தமிழ்நாட்டில் 3,200 கோடி ரூபாய் மதிப்பிலான சிறு நிதி நிலுவைக் கடனைக் கொண்டுள்ளது.
மேற்கு வங்காளம் தவிர அனைத்து மாநிலங்களும் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இரட்டை இலக்க மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியை எதிர் கொண்டன.
ஒடிசா 24.7% ஆகவும், அதைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகியவை முறையே 22.9% ஆகவும் அதிகளவிலான சரிவை எதிர் கொண்டன.