பெறுநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகமானது சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வரையறையை விரிவுபடுத்தியுள்ளது.
விரிவுபடுத்தப்பட்ட இந்த வரையறையின்படி ஒரு சிறு மற்றும் நடுத்தர நிறுவனம் என்பது 250 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யக் கூடிய மற்றும் 50 கோடி ரூபாய் வரை கடன்பெறும் ஒரு பட்டியலிடப்படாத நிறுவனம், வங்கி, காப்பீட்டு (அ) நிதி நிறுவனமாகும்.
இதற்கு முந்தைய வரம்பானது விற்பனைக்கு 50 கோடி ரூபாயும் கடன் பெறுதலுக்கு 10 கோடி ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
தற்போது 2021 ஆம் ஆண்டு நிறுவன (கணக்கீட்டுத் தர நிலைகள்) விதிகளின் கீழ் பல்வேறு விலக்குகளைப் பெறுவதற்கு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
இது சிறிய நிறுவனங்களுக்கான ஒழுங்குமுறை சார்ந்த சிக்கல்களைக் குறைக்கும்.