6.0 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சிறு வணிக கடன் தொகுப்புடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து தமிழ்நாடு, குஜராத் (3.69 லட்சம் கோடி ரூபாய்), உத்தரப் பிரதேசம் (3.61 லட்சம் கோடி ரூபாய்), கர்நாடகா (3.18 லட்சம் கோடி ரூபாய்) உள்ளன.
2025 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி, தமிழ்நாட்டின் சிறு வணிக கடன் தொகுப்பு 4.21 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என்ற நிலையில் இது 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பதிவான 3.64 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 15.7% அதிகமாகும்.
இந்தியாவின் மொத்த சிறு வணிகக் கடனில் தமிழ்நாடு 9.3% பங்கைக் கொண்டுள்ளது.
நிறுவன இருப்பைக் கொண்ட தனி உரிமையாளர்கள் மற்றும் தனி உரிமையாளர்களின் கடன் வாங்குபவர் பிரிவுகளில் முறையே 11% மற்றும் 8.8% பங்குகளுடன் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
நிறுவனக் கடன் வாங்குபவர் பிரிவில், தமிழ்நாடு 7.9% பங்கைக் கொண்டிருந்தது என்ற நிலையில் குஜராத் 9.7% உடன் இதில் இரண்டாவது இடத்தில் இருந்தது.
தமிழ்நாட்டின் சிறு வணிக கடன் தொகுப்பிற்கு சென்னை 10.6% பங்களித்தது, அதே நேரத்தில் மாநிலத்தின் PAR (ஆபத்தில் உள்ள நிதி தொகுப்புகள்) 91–180 ஆனது 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 1.7% ஆக இருந்தது.
இது இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) மற்றும் கடன் பணியகம் CRIF ஹை மார்க் ஆகியவற்றின் ஒரு கூட்டு அறிக்கையாகும்.