சிறைக் காவலில் உள்ள நபர்களின் உயிரிழப்பு குறித்தத் தரவு
February 21 , 2023 860 days 380 0
கடந்த ஐந்து ஆண்டுகளில், குஜராத்தில் சிறைக் காவலில் உள்ள நபர்களின் உயிரிழப்புகள் அதிகபட்சமாக 80 ஆக பதிவாகியுள்ளன.
இதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (76), உத்தரப் பிரதேசம் (41), தமிழ்நாடு (40), பீகார் (38) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
ஒன்பது ஒன்றியப் பிரதேசங்களில் கடந்த ஐந்தாண்டுகளில் பதிவான சிறைக் காவலில் உள்ள நபர்களின் உயிரிழப்புகளில் டெல்லியில் அதிகபட்சமாக 29 மரணங்கள் பதிவு ஆகியுள்ளன.
இதைத் தொடர்ந்து ஜம்மு & காஷ்மீர் 4வது இடத்தில் உள்ளது.
சிறைக் காவலில் உள்ள நபர்களின் உயிரிழப்புகளானது 2017-2018 ஆம் ஆண்டில் 146 ஆகவும், 2018-2019 ஆம் ஆண்டில் 136 ஆகவும், 2019-2021 ஆம் ஆண்டில் 112 ஆகவும், 2020-2021 ஆம் ஆண்டில் 100 ஆகவும் மற்றும் 2021-2022 ஆம் ஆண்டில் 175 ஆகவும் பதிவு ஆகியுள்ளன.