இந்தியச் சிறைச்சாலைகள் புள்ளிவிவர அறிக்கை 2024-இல், முக்கியமாக அதிக அளவிலான விசாரணைக் கைதிகளால் இந்தியச் சிறைகளில் தொடர்ந்து நிலவும் இட நெருக்கடியை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியாவில் 4.53 லட்சம் கைதிகளை அடைக்கும் திறன் கொண்ட 1,333 சிறைச் சாலைகள் உள்ளன, ஆனால் 2024 ஆம் ஆண்டில் 5.11 லட்சத்திற்கும் மேற்பட்ட கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.
தேசியச் சிறைச்சாலைகளின் ஆக்கிரமிப்பு விகிதம் 112.7% ஆக இருந்தது, இது அனுமதிக்கப் பட்ட திறனைத் தாண்டிய இடநெருக்கடியைக் குறிக்கிறது.
2024 ஆம் ஆண்டில் மொத்த சிறைக் கைதிகளின் எண்ணிக்கையில் விசாரணைக் கைதிகள் சுமார் 73% ஆவர்.
பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் 100%-க்கும் அதிகமான ஆக்கிரமிப்பு விகிதங்களைப் பதிவு செய்துள்ளன.
டெல்லி 194% என்ற அதிகபட்ச சிறைச்சாலை ஆக்கிரமிப்பு விகிதத்தைக் கொண்டு இருந்தது என்பதோடு அதன் கைதிகளில் 87%-க்கும் அதிகமானோர் விசாரணைக் கைதிகள் ஆவர்.