2025–26 ஆம் ஆண்டு குஞ்சு பொரிப்பிற்கான வலையமைக்கும் பருவத்திற்காக சென்னையில் சிற்றாமைகள்/ஆலிவ் ரெட்லி கடல் ஆமை குஞ்சு பொரிக்கும் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பெசன்ட் நகர் கடற்கரையில் முழுமையாகச் செயல்படும் ஆலிவ் ரிட்லி குஞ்சு பொரிக்கும் தளம் நிறுவப்பட்டுள்ளது.
நீலாங்கரை, கோவளம் மற்றும் பழவேற்காடு ஆகிய பகுதிகளில் அதன் புதிய குஞ்சுப் பொரிப்புத் தளங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு கடற்கரையில் ஆலிவ் ரெட்லி குஞ்சு பொரிக்கும் பருவம் டிசம்பர் மாதத்தில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும்.
ஆமைகள் மற்றும் அவற்றின் முட்டைகளைப் பாதுகாக்க தமிழ்நாடு வனத்துறை இரவு ரோந்து மற்றும் கூடு/வலை கண்காணிப்பைத் தொடங்கியுள்ளது.
இதன் முந்தைய குஞ்சுப் பொரிப்பு பருவத்தில் அமைக்கப்பட்ட 60 குஞ்சுப் பொரிப்பு மையங்களுடன் ஒப்பிடும் போது, இந்தப் பருவத்தின் ஆரம்பத்தில் சுமார் 50 குஞ்சுப் பொரிப்பு மையங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.