TNPSC Thervupettagam

சில்லறைப் பணவீக்கம் - அக்டோபர் 2025

November 17 , 2025 4 days 46 0
  • இந்தியாவின் சில்லறைப் பணவீக்கம் ஆனது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 0.25% ஆகக் குறைந்துள்ளது என்பதோடு இது வரலாற்றில் மிகவும் குறைந்த அளவைக் குறிக்கிறது.
  • இது 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த பணவீக்க விகிதமாகும் என்பதோடு மேலும் தற்போதைய CPI தொடரில் மிகக் குறைவாகும்.
  • சரக்கு மற்று சேவை வரி விகிதக் குறைப்பு, சாதகமான அடிப்படை விளைவு மற்றும் உணவுப் பொருட்களில் பணவீக்கம் குறைதல் ஆகியவை இந்தச் சரிவுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தன.
  • செப்டம்பர் மாதத்தில் 1.4% குறைவினைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் உணவு மற்றும் பானங்களின் பணவீக்கம் 3.7% குறைந்துள்ளது.
  • 1.7% ஆகக் குறைந்த ஆடை மற்றும் காலணிகளைத் தவிர, பிற பெரும்பாலான நுகர்வோர் விலைக் குறியீட்டு வகைகளில் கடந்த ஆண்டை விட அதிகப் பணவீக்கம் பதிவாகின.
  • எரிபொருள் மற்றும் மின் விளக்குகள் பணவீக்கம் 2% ஆக உயர்ந்தது என்பதோடு மேலும் வீட்டு வசதிகள் மீதான பணவீக்கம் 3% ஆக அதிகரித்தது.
  • இதரப் பணவீக்கம் ஆனது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சுமார் 5.7% ஆக அதிகரித்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்