இந்தியத் தேர்தல் ஆணையம் ஆனது ‘சிவசேனா’ என்ற பெயரையும் அக்கட்சியின் வில் அம்பு சின்னத்தையும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு ஒதுக்கியுள்ளது.
இந்த நடவடிக்கையானது, பாலா சாகேப் தாக்கரேவால் நிறுவப்பட்ட அசல் கட்சி இது என்று அங்கீகரிக்கப்பட்டது.
"பெரும்பான்மைச் சோதனை" என்ற அடிப்படையில் தேர்தல் ஆணையமானது இந்த முடிவினை மேற்கொண்டது.
ஏக்நாத் ஷிண்டே தரப்பிரனருக்கு ஆதரவு அளிக்கும் சட்டசபை உறுப்பினர்கள் குழுவானது கிட்டத்தட்ட 76% வாக்குகளையும், உத்தவ் தாக்கரே தரப்பினர் 23.5% வாக்குகளையும் பெற்றனர்.
ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனா கட்சி மக்களவையில் வென்ற 18 நபர்களில் 13 நபர்களையும், அம்மாநிலச் சட்டமன்றத்தில் வென்ற 56 நபர்களில் 40 நபர்களையும் கொண்டுள்ளதாக உரிமை கோரியுள்ளது.
2019 ஆம் ஆண்டு மகாராஷ்டிரச் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற சிவசேனா கட்சியில் 56 சட்டசபை உறுப்பினர்கள் உள்ளனர்.
கடந்த ஜூன் மாதத்திலிருந்து, கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பாக இரு தரப்பினர்களுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.