சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்கள்
April 15 , 2020
1937 days
674
- இந்தியா தற்பொழுது “திறன்மிகு முடக்கத்தில்” நுழைய இருப்பதாக அறிவிக்கப் பட்டு உள்ளது.
- திறன்மிகு முடக்கத்தின் (Smart lockdown) கீழ், இந்தியாவானது சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது.
- சிவப்பு மண்டலங்கள் முக்கியமான பகுதிகளாக (நோய்த் தொற்று அதிகம் காணப்படும்) அறிவிக்கப் பட்டுள்ள பகுதிகளாகும்.
- இங்கு எந்தவொருப் பொருளாதார நடவடிக்கையும் அனுமதிக்கப் படுவதில்லை.
- ஆரஞ்சு மண்டலங்கள் என்பது குறைவான பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப் பட்டுள்ள பகுதிகளாகும்.
- இந்த மண்டலத்தில் வேளாண் உற்பத்திப் பொருட்கள் மீதான அறுவடை நடவடிக்கைகளும் அனுமதிக்கப் படுகின்றன.
- பச்சை மண்டலத்தில், வேளாண் நடவடிக்கைகளுடன் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறை நிறுவனங்களும் தமது செயல்பாடுகளைத் தொடங்க இருக்கின்றன.
- இந்தத் தொழிற்சாலைகள் பணியாளர்களுக்கு சமூக விலகல் வசதிகளுடன் விடுதி வசதிகளையும் வழங்க இருக்கின்றன.
Post Views:
674