December 18 , 2025
15 hrs 0 min
43
- மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் சமீபத்தில் காலமானார்.
- 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை மக்களவையின் 10வது சபாநாயகராக பணி ஆற்றினார்.
- பாதுகாப்பு, வணிகம், பொது விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலா உள்ளிட்ட முக்கியமான மத்திய அமைச்சரவை இலாகாக்களை பாட்டீல் வகித்தார்.
- மக்களவையில் லத்தூர் தொகுதியின் பிரதிநிதியாக தொடர்ந்து ஏழு முறை அவர் பதவி வகித்தார்.
- பாட்டீல் 2010 முதல் 2015 ஆம் ஆண்டு வரை பஞ்சாப் ஆளுநராகவும் சண்டிகரின் நிர்வாகியாகவும் பணியாற்றினார்.
- ஒளிபரப்பு நடவடிக்கைகள் மற்றும் பாராளுமன்ற நூலகத்தைக் கட்டமைத்தல் உள்ளிட்டப் பாராளுமன்ற நடைமுறைகளை நவீனமயமாக்குவதில் அவர் பெயர் பெற்றவர்.
- 26/11 மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு தார்மீகப் பொறுப்பேற்று பாட்டீல் 2008 ஆம் ஆண்டில் மத்திய உள்துறை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.

Post Views:
43