TNPSC Thervupettagam

சிவிங்கிப் புலிகளின் இடமாற்றம்

July 21 , 2025 6 days 61 0
  • குனோ தேசியப் பூங்காவிலிருந்து மத்தியப் பிரதேச மாநிலத்தின் காந்தி சாகர் சரணாலயத்திற்கு சிவிங்கிப் புலிகள் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளன.
  • குஜராத்தில் உள்ள பான்னி புல்வெளிகள் இந்திய துணைக் கண்டத்தில் மிகப்பெரிய பரப்பளவாகும்.
  • மேலும் இது நாட்டில் சிவிங்கிப் புலிகளின் மறுவாழ்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 இடங்களில் ஒன்றாகும்.
  • தற்போது இந்த பெரும் பூனை இனத்தினைக் கொண்டிருக்க என்று இது முழுமையாக தயாராக உள்ளது.
  • இது ஒரு தனித்துவமான உவர் தன்மை தாங்கும் புல்வெளி சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய வெப்பமண்டல புல்வெளி ஆகும்.
  • இது மால்தாரிஸ், ரபாரிஸ், முத்வாஸ் மற்றும் மேக்வால்ஸ் போன்ற சில மேய்ச்சல் சமூகங்கள் வசித்து வந்த பகுதியாகும்.
  • ஆப்பிரிக்காவில் சிவிங்கிப் புலிகளின் மிகவும் இயற்கையான வாழ்விடத் தேர்வுகளில் புல்வெளிகள், சவன்னாக்கள் மற்றும் புதர்க்காடுகள் அடங்கும்.
  • ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளையின் மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறு வாழ்வு வசதியான வந்தாரா, பான்னி புல்வெளிகளில் புள்ளி மான்களை மறு அறிமுகப் படுத்தியுள்ளது.
  • மறு அறிமுகப்படுத்தும் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நமீபியாவிலிருந்து எட்டு மற்றும் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தென்னாப்பிரிக்காவிலிருந்து 12 என 20 ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகள் குனோ தேசியப் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டன.
  • மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்கா, ஆப்பிரிக்காவிலிருந்து இடமாற்றம் செய்யப் பட்ட சிவிங்கிப் புலிகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் தளம் ஆகும்.
  • சிவிங்கிப் புலிகளின் அறிமுகத்திற்கான செயல் திட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பிற சாத்தியமான தளங்கள்
    • சத்தீஸ்கரில் உள்ள குரு காசிதாஸ் தேசியப் பூங்கா;
    • துப்ரி வனவிலங்குச் சரணாலயம், சஞ்சய் தேசியப் பூங்கா, பாக்தாரா வனவிலங்கு சரணாலயம், மத்தியப் பிரதேசத்தில் வீராங்கனை துர்காவதி புலிகள் சரணாலயம்;
    • இராஜஸ்தானில் பாலைவன தேசியப் பூங்கா மற்றும் ஷாகர் புல்வெளிகள் மற்றும்
    • உத்தரப் பிரதேசத்தில் கைமூர் வனவிலங்கு சரணாலயம்.
  • தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) இதற்கான முதன்மை முகமை ஆகும்.
  • NTCA என்பது MoEFCCC அமைச்சகத்தின் கீழான, 2006 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் விதிகளின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
  • சிவிங்கிப் புலிகளானது உலகின் மிக வேகமாக ஓடும் பாலூட்டி மற்றும் இந்தியாவில் அழிந்துபோன ஒரே பெரிய மாமிச உண்ணி (1952) ஆகும்.
  • இது ஆசியாவில் கிழக்கு ஈரானின் மிக வறண்ட பகுதிகளில் மற்றும் ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படுகிறது.
  • சிவிங்கிப் புலிகள் மற்ற பெரும் பூனை இனங்களைப் போல (சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள் மற்றும் ஜாகுவார்) உறுமுவதில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்