சிவிங்கிப் புலிகளின் பராமரிப்பு குறித்த தகவல் அறியும் உரிமைச் சட்ட கோரிக்கை
July 31 , 2024 379 days 321 0
ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கிப் புலிகள் மற்றும் இந்தியாவில் பிறந்த குட்டிகளின் பராமரிப்பு குறித்த தகவலுக்கான கோரிக்கையை அளிப்பதற்கு மத்தியப் பிரதேச வனத்துறை மறுத்துள்ளது.
வனவிலங்கு ஆர்வலர் அஜய் துபே, குனோ மற்றும் மண்ட்சூரில் உள்ள சிவிங்கிப் புலிகள் பற்றிய ஆவணப் பதிவுகளைக் கோரி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒரு கோரிக்கையைத் தாக்கல் செய்தார்.
இருப்பினும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 8(1)(a) பிரிவினைப் பயன்படுத்தி, அந்தத் தகவலை வெளியிட வனத்துறை மறுத்துவிட்டது.
2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து சிவிங்கிப் புலிகள் வளங்காப்பு திட்டம் பற்றிய தகவல்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படுவதற்கு மறுக்கப் படுவது இதுவே முதல் முறையாகும்.
தற்போது, சிவிங்கிப் புலிகள் வளங்காப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, குனோவில் 26 சிறுத்தைகள் மற்றும் குட்டிகள் உள்ளன.