TNPSC Thervupettagam

சிவில் பதிவு முறைமை (CRS) 2024 பதிவு அறிக்கை

July 6 , 2026 2 days 200 0
  • சிவில் பதிவு முறைமை (CRS) 2024 அறிக்கையின்படி, 2024-ஆம் ஆண்டில் இந்தியாவில் 99.1% பிறப்புகளும் 99.4% இறப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • 2024-ஆம் ஆண்டில் மொத்தம் 254.7 லட்சம் பிறப்புகளும் 89.4 லட்சம் இறப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2023-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட புள்ளிவிவரங்களை விட அதிகமாகும்.
  • இந்தியாவில் பிறப்பு பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 917 பெண்களாக இருந்தது; இதில் அருணாச்சலப் பிரதேசம் (1,050) அதிகபட்சமாகவும், நாகாலாந்து (865) குறைந்த பட்சமாகவும் கொண்டதாக பதிவு செய்யப் பட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது 2024-ஆம் ஆண்டில் 81,117 இறந்தே பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது என்ற நிலையில் இதில் சுமார் 69% நகர்ப் புறங்களில் நிகழ்ந்துள்ளன.
  • பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம், 1969-இன் கீழ் பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு கட்டாயமாகும் என்பதுடன் மேலும் இத்தரவு மக்கள்தொகைத் திட்டமிடல் மற்றும் பொதுக் கொள்கைக்கு ஆதரவளிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்